/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.22 லட்சம் மோசடி உத்தண்டி நபர் கைது ரூ.22 லட்சம் மோசடி உத்தண்டி நபர் கைது
ரூ.22 லட்சம் மோசடி உத்தண்டி நபர் கைது
ரூ.22 லட்சம் மோசடி உத்தண்டி நபர் கைது
ரூ.22 லட்சம் மோசடி உத்தண்டி நபர் கைது
ADDED : ஜூன் 01, 2025 12:28 AM

சென்னை, செம்பியத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 35. இவருக்கு, ஆன்லைன் 'சாட்டிங்' செயலி வாயிலாக, ஜன., 13ல் நபர் ஒருவர் அறிமுகமானார். குளோபல் மார்க்கெட் என்ற ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய டில்லிபாபு, 22.72 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, எடுக்க முடியவில்லை. அப்போது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
மோசடி குறித்து வடக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், மோசடியில் ஈடுபட்டவர் பயன்படுத்திய வங்கி கணக்குகளின் விபரங்கள், மின்னஞ்சல் முகவரி, மொபைல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில், சென்னை அடுத்த உத்தண்டியைச் சேர்ந்த முத்துமாணிக்கம், 55, என்பவர், நண்பருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசார், நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் ஒன்றை பறிமுதல் செய்தனர். அவரது வங்கி கணக்குகளை முடக்கினர்.
மோசடிக்கு உடந்தையாக இருந்த, முத்து மாணிக்கத்தின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.