/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ நிலையங்களில் 'லுலு' வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு மெட்ரோ நிலையங்களில் 'லுலு' வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு
மெட்ரோ நிலையங்களில் 'லுலு' வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு
மெட்ரோ நிலையங்களில் 'லுலு' வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு
மெட்ரோ நிலையங்களில் 'லுலு' வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு
ADDED : மார் 25, 2025 02:02 AM
சென்னை,மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறப்பதற்கு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பேரவை தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட இருப்பதாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நாடு முழுதும் சில்லறை வணிகம், சிறு கடைகள் அழிந்து வருகின்றன. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறப்பது, ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவாக செயல்படுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
இதனால், சிறு கடைகள் அழியும் நிலை உருவாகும். இது, நாட்டுக்கு நல்லது அல்ல. நம் நாட்டு பாரம்பரியமான சில்லறை வணிகத்தை அழிப்பது, விதை நெல்லை சாப்பிடுவதற்கு சமம்.
எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில், லுலு ஹைப்பர் மார்க்கெட் திறப்பதை நிறுத்துமாறு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.