/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து
நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து
நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து
நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து
ADDED : ஜூன் 26, 2025 11:59 PM

அடையாறு, அடையாறு, சர்தார்படேல் சாலையில் நேருக்குநேர் லாரிகள் மோதிய விபத்தில், கான்கிரீட் கலவையுடன் வந்த லாரி கவிழ்ந்ததில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்புரத்தில் இருந்து அடையாறு நோக்கி, நேற்று காலை 5:30 மணிக்கு, கான்கிரீட் கலவை ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அதேநேரம், சைதாப்பேட்டையில் இருந்து ஓ.எம்.ஆர்., நோக்கி கழிவுநீர் லாரி வந்தது.
அடையாறு, சர்தார்படேல் சாலை கேன்சர்மருத்துவமனை சிக்னலில், எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் நேருக்குநேர் மோதி கொண்டன.
இதில், கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததில், கான்கிரீட் கலவை சாலையில் கொட்டியது. அதோடு, லாரியில் இருந்த டேங்கர் சேதமடைந்து, டீசலும் சாலையில் கொட்டியது.
அந்தவழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கினர்.
இதையடுத்து, கோட்டூர்புரம், கிண்டியில் இருந்து அடையாறு வழித்தடம் மற்றும் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அடையாறு பகுதியில் இருந்து, கிண்டி, கோட்டூர்புரம் வழித்தடங்களிலும், ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் மற்றும் துாய்மை பணி செய்யும் 'உர்பேசர் சுமித்' ஊழியர்கள், 25 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட் கலவையுடன் டீசல் கலந்ததால், அப்படியே அள்ள முடியவில்லை. இதனால், சறுக்காத வகையில் மணல் சாலை சுத்தம் செய்யப்பட்டது. கவிழ்ந்த லாரி கிரேன் கொண்டு வந்து அகற்றப்பட்டது. இந்த பணிகள் காலை 8:30 மணி வரை நடந்தன.
இதனால், மூன்று மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை மற்றும் அவசர பணியாக சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.அடையாறு போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.