
கணிதம் கசப்பது ஏன்?
பொதுவாக, கணிதம் சார்ந்த சூத்திரங்கள் தெரிந்த பலருக்கு, வாழ்க்கையில் எப்படியெல்லாம் அதன் பயன்பாடு இருக்கும் என்பதை அறிய ஆர்வம் இருக்காது. ஒரு சம்பிரதாயமாக, மதிப்பெண் சார்ந்ததாக நினைப்பது தான் காரணம். கணிதத்தால் கிடைக்கும் அனுகூலத்தை சொல்லும்போது இயல்பாக ஆர்வம் வந்துவிடும்.
கணிதத்தின் மீதான ஆர்வத்தை துாண்ட நீங்கள் செய்வது?
கணித மேதை ராமானுஜம், 'பை' எனும் கணித குறியீடு சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர். அவரது ரசிகனான நான், கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த 'பை கணித மன்றம்' என்ற அமைப்பை, 2007ல் ஏற்படுத்தினேன்.
கணிதம் சார்ந்த கட்டுரைக ளுக்கு வரவேற்பு உள்ளதா?
பல கல்லுாரிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதும், கருத்தரங்குகளில் பங்கேற்று பேசுவதுமாக இருந்தேன்.
கணிதத்தில் கதைகள் சாத்தியமா?
மாணவர்களை பெரிதும் கவரும் பஞ்சதந்திர கதைகள், தெனாலிராமன் கதைகள் உள்ளிட்டவற்றில், கணிதத்தை புகுத்தி எளிமையாக சொல்வேன். சில கணிதங்களுக்கு, நாமே கதைகளை உருவாக்க வேண்டியிருக்கும். தேவைக்கு ஏற்ப கதைகளை புனைகிறோம். கதைகள் முக்கியமல்ல, அதில் வரும் கணிதம்தான் முக்கியம்.
எந்தெந்த முறைகளில் கணிதத்தை புகட்டுவீர்கள்?
நம் நாட்டில் உள்ள பெரிய கட்டுமானங்கள், கோவில்கள் மட்டுமின்றி எகிப்தின் பிரமிடு உள்ளிட்டவற்றின் தகவல்களைக் கூறி, அந்த அதிசயக் கட்டுமானங்களுக்குப் பின் உள்ள கணிதத்தை விளக்குவேன்.
உதாரணம்?
மனிதனின் தேவைக்கு ஏற்ப அறிவியல் வளர்கிறது. அறிவியலை கணிதமே நிலைநிறுத்துகிறது.


