/உள்ளூர் செய்திகள்/சென்னை/காப்பீடு நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலிடம்காப்பீடு நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலிடம்
காப்பீடு நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலிடம்
காப்பீடு நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலிடம்
காப்பீடு நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலிடம்
ADDED : ஜன 28, 2024 12:16 AM
சென்னை, 'காப்பீட்டுத் துறையில் 24க்கும் அதிகமான போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், எல்.ஐ.சி., முதலிடத்தில் இருக்கிறது' என, அதன் தென் மண்டல மேலாளர் வெங்கடரமணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., கட்டடத்தில் தென் மண்டல மேலாளர் வெங்கடரமணன் தேசியக் கொடியேற்றி வைத்தார். அவர் பேசியதாவது:
காப்பீடு துறையில் 24க்கும் அதிகமான போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், தொடர்ந்து எல்.ஐ.சி., முன்னணியில் உள்ளது.
நடப்பு வணிக ஆண்டில் இதுவரை தன் விருத்தி, ஜீவன் கிரண், ஜீவன் உத்சவ், ஜீவன் தாரா 2 ஆகிய நான்கு பாலிசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க கடந்த அக்., 31ல் நடந்த சிறப்பு முகாம்களில், எல்.ஐ.சி.,யின் தென் மண்டலம் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தது. வரும் பிப்., 29 வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
உயர்நிலை பள்ளிப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் எல்.ஐ.சி.,யின் கோல்டன் ஜூப்ளி கல்வி உதவித் திட்டத்தின்கீழ் இந்த வணிக ஆண்டில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், லட்சத் தீவுகளில் சுமார் 400 மாணவர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.