ADDED : ஜன 31, 2024 12:11 AM

மேடவாக்கம், தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் ஜன., 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மேடவாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.
மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வட்டார மருத்துவ அலுவலர், சித்த மருத்துவர் அலுவலர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில், போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை இறை வணக்கத்தின்போது, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.