ADDED : பிப் 12, 2024 02:06 AM
குன்றத்துார்:சென்னை அருகே உள்ள மாங்காடு நகராட்சி ஓம் சக்தி நகரில், ஓம் சக்தி விநாயகர் கோவில் அண்மையில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது.
இதை தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை கலசங்களில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.