Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு பாராட்டு

மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு பாராட்டு

மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு பாராட்டு

மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு பாராட்டு

ADDED : ஜன 25, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
சென்னை,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மழை வெள்ளத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட, 1,200 மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி பேசியதாவது:

ஒவ்வொறு மழை வெள்ள பாதிப்பிலும், மீனவர்கள் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றியுள்ளனர். இத்தகைய நேர்மையும், துணிச்சலும் மீனவர்களிடம் எனக்கு பிடித்தது. நம்பி வந்தவர்களுக்கு துணை நிற்பவர்கள் மீனவர்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், மீனவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை, இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மற்ற உயிரை காப்பாற்றுபவர்களே உண்மையான கடவுள். மீனவர்கள் கடவுளுக்கு சமம்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us