/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை பொருட்கள் விற்பனை கும்பலின் முக்கிய புள்ளி கைது போதை பொருட்கள் விற்பனை கும்பலின் முக்கிய புள்ளி கைது
போதை பொருட்கள் விற்பனை கும்பலின் முக்கிய புள்ளி கைது
போதை பொருட்கள் விற்பனை கும்பலின் முக்கிய புள்ளி கைது
போதை பொருட்கள் விற்பனை கும்பலின் முக்கிய புள்ளி கைது
ADDED : செப் 03, 2025 12:28 AM
மாதவரம், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த, கும்பலின் முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாத இறுதியில், மாதவரம் அருள் நகர் மைதானத்தில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஐஸ்வர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, மற்றொரு முக்கிய நபரான பெரியார் நகரை சேர்ந்த ஜெய்சன், 30 என்பவரை, மாதவரத்தில் உள்ள ஆந்திரா பஸ் நிலையம் அருகே, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து, சென்னையில் விற்க முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். கைதான ஜெய்சன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.