/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காரைக்குடி வியாபாரியை கடத்தி ரூ.38 லட்சம் நகை, போன் பறிப்பு காரைக்குடி வியாபாரியை கடத்தி ரூ.38 லட்சம் நகை, போன் பறிப்பு
காரைக்குடி வியாபாரியை கடத்தி ரூ.38 லட்சம் நகை, போன் பறிப்பு
காரைக்குடி வியாபாரியை கடத்தி ரூ.38 லட்சம் நகை, போன் பறிப்பு
காரைக்குடி வியாபாரியை கடத்தி ரூ.38 லட்சம் நகை, போன் பறிப்பு
ADDED : ஜூலை 01, 2025 12:28 AM
சென்னை, எழும்பூரில் பேருந்திற்காக காத்திருந்த, காரைக்குடி நகை கடைக்காரரை கடத்தி, 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 64. இவர், சொந்த ஊரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 26ம் தேதி சென்னை வந்த ரவிச்சந்திரன், சவுகார்பேட்டையில், 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் வாங்கி உள்ளார்.
இரவு, அந்த நகைகளுடன், சொந்த ஊருக்குச் செல்ல, எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே, ஆம்னி பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது மர்ம நபர்கள், அவரிடம் பேச்சுக்கொடுத்து, நகைகளுடன் காரில் கடத்தி உள்ளனர். அதன் பின், நகைகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவ பல்கலை அருகே இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
செய்வதறியாது தவித்த ரவிச்சந்திரன், போரூர் பகுதியில் நின்ற ஒருவரிடம் மொபைல் போன் வாங்கி, நடந்த சம்பவம் குறித்து காரைக்குடியில் உள்ள மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவரிடம், சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் பணம் அனுப்பச் சொல்லி, காரைக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு நகைகள், மொபைல் போன் பறிக்கப்பட்டது குறித்து, போலீசில் புகார் அளிக்க முயன்றுள்ளார்.
சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால், அங்கு தான் நீங்கள் புகார் அளிக்க வேண்டும் என, காரைக்குடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் சென்னை வந்த ரவிச்சந்திரன், கடத்தல் சம்பவம் குறித்து, திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம் புகார் அளித்தார்.
ரவிச்சந்திரனிடம் நகைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் இல்லை. ஆனால், அவர் எழும்பூரில் இருந்து, போரூர் வரை காரில் கடத்தப்பட்டதற்கான 'சிசிடிவி' கேமரா பதிவுகள் உள்ளன.
அவற்றை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளிப்பதால் ரவிச்சந்திரனிடமும் விசாரணை நடக்கிறது.