/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சர்வதேச 'ஸ்பீட் ஸ்கேட்டிங்' காஞ்சி மாணவிக்கு 2 தங்கம் சர்வதேச 'ஸ்பீட் ஸ்கேட்டிங்' காஞ்சி மாணவிக்கு 2 தங்கம்
சர்வதேச 'ஸ்பீட் ஸ்கேட்டிங்' காஞ்சி மாணவிக்கு 2 தங்கம்
சர்வதேச 'ஸ்பீட் ஸ்கேட்டிங்' காஞ்சி மாணவிக்கு 2 தங்கம்
சர்வதேச 'ஸ்பீட் ஸ்கேட்டிங்' காஞ்சி மாணவிக்கு 2 தங்கம்
ADDED : மே 30, 2025 12:20 AM

காஞ்சிபுரம் :சர்வதேச அளவிலான, ‛ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் -- 2025' போட்டி, இந்தோனேஷியாவில், கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் நடந்தது.
இதில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட, 8 நாடுகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், 500 மீட்டர், 1,000 மீட்டர், 10,000 மீட்டர் என, மூன்று பிரிவுகளின் கீழ், பல்வேறு வயது அடிப்படையில் போட்டி நடந்தது. இதில், இந்தியா முழுதும், 36 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், 15 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.கயல்யா, 1,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஆகிய இரு பிரிவுகளில் பங்கேற்று, இரு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பதக்கம் வென்ற மாணவியை, அகாடமி நிறுவனர் சீனிவாசன், தலைமை பயிற்சியாளர் பாபு, பயிற்சியாளர்கள் தமிழ், பாபு, தர்மேஷ், ஹரிஹரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.