வரும் 17, 18ல் ஆலந்துாரில் ஜமாபந்தி
வரும் 17, 18ல் ஆலந்துாரில் ஜமாபந்தி
வரும் 17, 18ல் ஆலந்துாரில் ஜமாபந்தி
ADDED : ஜூன் 15, 2025 12:20 AM
சென்னை, வருவாய் துறை சார்பில், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடத்தப்படும். நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு, இதில் முறையிட்டு தீர்வு பெறலாம். அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து விளக்கம் பெறலாம்.
ஆலந்துார் உள்வட்டத்தில், இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி வரும், 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், ஆலந்துார் தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
வரும், 17ம் தேதி நந்தம்பாக்கம், ஆலந்துார், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லுார் ஆகிய பகுதிகளுக்கு நடத்தப்படுகிறது.
வரும், 18ம் தேதி முகலிவாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், தலக்கணஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு நடத்தப்படுகிறது.
பொதுமக்கள், இதை பயன்படுத்துக் கொள்ளலாம் என, ஆலந்துார் வட்ட வருவாய்துறை தீர்வாய அலுவலர் ரவிசந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.