/உள்ளூர் செய்திகள்/சென்னை/மழை நீரை தடுக்க மெட்ரோ நுழைவு பகுதி உயரம் அதிகரிக்க முடிவுமழை நீரை தடுக்க மெட்ரோ நுழைவு பகுதி உயரம் அதிகரிக்க முடிவு
மழை நீரை தடுக்க மெட்ரோ நுழைவு பகுதி உயரம் அதிகரிக்க முடிவு
மழை நீரை தடுக்க மெட்ரோ நுழைவு பகுதி உயரம் அதிகரிக்க முடிவு
மழை நீரை தடுக்க மெட்ரோ நுழைவு பகுதி உயரம் அதிகரிக்க முடிவு
ADDED : ஜன 06, 2024 12:19 AM
சென்னை,'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் எதிர்கொண்டது.
இதனால், வரும் ஆண்டுகளில், வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை மெட்ரோ நிர்வாகம் வகுத்துள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள அனைத்து மேம்பால ரயில் நிலையங்களில், மழை வெள்ள நீர் புகாதபடி நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளின் உயரம், மேலும் 2 அடி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில், தண்ணீர் நுழைவதைத் தடுக்கும் வகையில், சில நிலையங்களில் மட்டும் வெள்ளக் கதவுகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அனைத்து சுரங்க ரயில் நிலையங்களிலும் இந்த வசதி உருவாக்கப்படும். கலங்கரை விளக்கம், அடையாறு சந்திப்பு நிலையங்களில் மழைநீர் நுழைவதைத் தடுக்க, 7 அடி உயரத்துக்கு, தானியங்கி வெள்ளக் கதவுகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.