/உள்ளூர் செய்திகள்/சென்னை/துல்லியமான பார்வைக்கு நவீன கருவி வாசன் கண் மருத்துவமனையில் அறிமுகம்துல்லியமான பார்வைக்கு நவீன கருவி வாசன் கண் மருத்துவமனையில் அறிமுகம்
துல்லியமான பார்வைக்கு நவீன கருவி வாசன் கண் மருத்துவமனையில் அறிமுகம்
துல்லியமான பார்வைக்கு நவீன கருவி வாசன் கண் மருத்துவமனையில் அறிமுகம்
துல்லியமான பார்வைக்கு நவீன கருவி வாசன் கண் மருத்துவமனையில் அறிமுகம்
ADDED : பிப் 11, 2024 12:18 AM

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் வாசன் கண் மருத்துவமனையில், 'கான்டூரா விஷன்' என்ற நவீன மருத்துவ கருவி அறிமுக நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
மருத்துவ ஊரக நலப்பணி இயக்குனர் ராஜமூர்த்தி, திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்ட பலர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
'கான்டூரா விஷன்' குறித்து, மருத்துவர்கள் அசோகன், மேரி சோபா, ராஜேஸ்வரி, காஞ்சனா ஆகியோர் கூறியதாவது:
கிட்டப் பார்வை, துாரப் பார்வை குறைபாடு உள்ளோர், கண்ணாடி அணிய வேண்டியது அவசியமாகும். கண்ணாடி இல்லை என்றால், காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் அது, அனைவருக்கும் பொருந்தாது.
பைக் போன்ற வாகனங்களில் செல்வோர், விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு, காண்டாக்ட் லென்ஸ் அணிவது சிரமம். இதற்கு தீர்வாக, லேசிக் மற்றும் ஸ்மைல் லேசர் சிகிச்சை முறைகள் இருந்தன. இந்த சிகிச்சை முறைகளைவிட, பன்மடங்கு திறனுடைய அதிநவீன லேசர் சிகிச்சை தான், கான்டூரா விஷன் சிகிச்சை முறை.
மற்ற லேசர் சிகிச்சை முறையில், 2,000 திறன் வரை லேசர் செலுத்தப்படுகிறது எனில், கான்டூரா விஷனில், 22,000 திறன் லேசர் செலுத்தப்படுகிறது.
இதனால், கான்டூராவில் மிக துல்லியமான பார்வை கிடைக்கும். 20 முதல் 40 வயதுடையோருக்கு, இந்த சிகிச்சை முறை ஏற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.