/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'சுயம்வரா கிராண்ட்' தொகுப்பு 'ராம்ராஜ் காட்டன்' அறிமுகம் 'சுயம்வரா கிராண்ட்' தொகுப்பு 'ராம்ராஜ் காட்டன்' அறிமுகம்
'சுயம்வரா கிராண்ட்' தொகுப்பு 'ராம்ராஜ் காட்டன்' அறிமுகம்
'சுயம்வரா கிராண்ட்' தொகுப்பு 'ராம்ராஜ் காட்டன்' அறிமுகம்
'சுயம்வரா கிராண்ட்' தொகுப்பு 'ராம்ராஜ் காட்டன்' அறிமுகம்
ADDED : செப் 16, 2025 12:45 AM

சென்னை:'ராம்ராஜ் காட்டன்' நிறுவனம் சார்பில், புதிய 'சுயம்வரா கிராண்ட்' தொகுப்பு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 'சுயம்வரா கிராண்ட்' எனும், கலைநயம் மிக்க பட்டு ஆடை தொகுப்பை, அதன் நிறுவனர் நாகராஜன், சென்னையில் அறிமுகம் செய்தார்.
வேட்டி, சட்டை, துண்டு ஆகியவை அடங்கிய இந்த தொகுப்பு, ராம்ராஜ் காட்டனின் அனைத்து கடைகளிலும், முன்னணி ஜவுளிக்கடைகளிலும் கிடைக்கும்.
இது குறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறியதாவது:
பல ஆண்டுகளாக ராம்ராஜ் காட்டன், நம் சுதேசி பாரம்பரியத்தை கொண்டாடி வரும் நிலையில், அதில் நவீனத்தையும் பிரதிபலிக்கிறது. அந்த முயற்சியில், சுயம்வரா கிராண்ட் அடியெடுத்து வைத்திருக்கிறது.
வாழ்க்கையின் சிறப்பான தருணங்களில், அணியும் ஆடையும், அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது. நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, எங்கள் பிராண்டின் மதிப்புகளையும், உணர்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி கூறுகையில், ''பருத்தியில் இருந்து பட்டு வரை, தரம் மற்றும் காலத்தால் அழியாத பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற, ராம்ராஜ் காட்டனை, பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் ஒரு முகமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். 'சுயம்வரா கிராண்ட்' வெறும் ஆடை அல்ல, அது பெருமை, சொந்தம், நம்பிக்கை ஆகிய உணர்வுகளை தருகிறது. அது, ஆண்களுக்கான தனி அழகையும், கம்பீரத்தையும் சிறப்பாக வழங்குகிறது,'' என்றார்.