/உள்ளூர் செய்திகள்/சென்னை/சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியா வீரர் சாம்பியன்சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியா வீரர் சாம்பியன்
சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியா வீரர் சாம்பியன்
சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியா வீரர் சாம்பியன்
சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியா வீரர் சாம்பியன்
ADDED : ஜன 29, 2024 02:00 AM

சென்னை:'மாலை முரசு' அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு மூன்றாவது சர்வதேச டென்னிஸ் போட்டி, அடையாறு காந்தி நகர் கிளப்பில் ஒரு வாரமாக நடந்தது.
ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பலர் பங்கேற்றனர்.
நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், 6:4; 7:6 என்ற செட் கணக்கில், ஆஸ்திரேலிய வீரர் பெர்னாட் டோமிக், இந்திய வீரர் சசிகுமார் முகுத்ந்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் பெற்றார்.
அவருக்கு, 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், 25 தரவரிசை புள்ளிகளும் வங்ககப்பட்டன.
இரண்டாம் இடம் பிடித்த வீரர் சசிகுமார் முகுந்துக்கு 1.76 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் 16 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன.
வெற்றிபெற்ற வீரர்களுக்கு, 'மாலை முரசு' நிர்வாக இயக்குனர் ரா.கண்ணன் ஆதித்தனார், சன்மார் குழும துணை தலைவர் குமார் ஆகியோர், பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
தமிழக டென்னிஸ் அசோசியேஷன் தலைமை செயல் அதிகாரி ஷிடென் ஜோஷி, இணை செயலர் வெங்கடேஷ், காந்தி நகர் கிளப் தலைவர் சுனில் ரெட்டி, கமிட்டி உறுப்பினர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.