/உள்ளூர் செய்திகள்/சென்னை/சர்வதேச ஓபன் சதுரங்கம் சென்னை வீரர் முன்னிலைசர்வதேச ஓபன் சதுரங்கம் சென்னை வீரர் முன்னிலை
சர்வதேச ஓபன் சதுரங்கம் சென்னை வீரர் முன்னிலை
சர்வதேச ஓபன் சதுரங்கம் சென்னை வீரர் முன்னிலை
சர்வதேச ஓபன் சதுரங்கம் சென்னை வீரர் முன்னிலை
ADDED : ஜன 05, 2024 12:13 AM

சென்னை,மகாலிங்கம் கோப்பைக்கான 14வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி, சென்னை எழும்பூரில் நடக்கிறது. அகில இந்திய சதுரங்க கழகம் ஆதரவுடன், தமிழ்நாடு சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் இணைந்து நடத்துகின்றன.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள், கிராண்ட் மாஸ்டர்கள், இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் என, 300 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று, ஆறு மற்றும் ஏழாவது சுற்றுகள் நிறைவடைந்தன. இதில் ஏழாவது சுற்றில், வியட்நாம் வீரர் நிகுயென் டக் ஹோவா மற்றும் பெலாரஸ் நாட்டின் பெடோரோவ் அலெக்ஸி ஆகியோர் மோதி 'டிரா' செய்தனர்.
இதனால் வியட்நாம் வீரர், 6.5 புள்ளிகள் பெற்று, முன்னிலையை தக்க வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் சவ்செங்கோ போரிஸ், பெலாரஸ் நாட்டின் பெடோரோவ் அலெக்ஸி, இந்தியா சார்பில் சென்னை வீரர் ஸ்ரீஹரி, மஹாராஷ்டிராவின் அபிேஷக் கெல்கர், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த க்ளெக் இகோர் ஆகியோர், தலா 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.