/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லஞ்சம் தந்தால் துாய்மை பணி அலப்பறை காட்டும் ஆய்வாளர் லஞ்சம் தந்தால் துாய்மை பணி அலப்பறை காட்டும் ஆய்வாளர்
லஞ்சம் தந்தால் துாய்மை பணி அலப்பறை காட்டும் ஆய்வாளர்
லஞ்சம் தந்தால் துாய்மை பணி அலப்பறை காட்டும் ஆய்வாளர்
லஞ்சம் தந்தால் துாய்மை பணி அலப்பறை காட்டும் ஆய்வாளர்
ADDED : ஜூன் 26, 2025 12:16 AM
கொருக்குப்பேட்டை, மாதந்தோறும் 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக்கேட்டு, துாய்மை பணியாளர்களை, துப்புரவு ஆய்வாளர் மிரட்டிய சம்பவம், மாநகராட்சி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, 47வது வார்டு துப்புரவு ஆய்வாளராக பணிபுரிபவர் ரமாதேவி. இவருக்கு கீழே 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர், 'மாதந்தோறும் 5,000 ரூபாய் தர வேண்டும்; இல்லாவிட்டால் பணியிட மாற்றம் செய்வேன்' என, துாய்மை பணியாளர்களை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், துாய்மை பணியாளர் ஒருவர், 3,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க, மீதமுள்ள பணத்தை கேட்டு மிரட்டும் வீடியோ நேற்று, சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
பகலில் துாய்மை பணியில் ஈடுபடுவோரிடம் மாதந்தோறும் தலா 5,000 ரூபாய்; இரவு பணியில் ஈடுபடுவோரிடம், தலா, 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
லஞ்சம் தர மறுத்த துாய்மை பணியாளர்களை பணி மாற்றம் அல்லது நிரந்தரமாக பணியை பறிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவருக்கு துணையாக வார்டு கவுன்சிலர், அவரது கணவர், உதவியாளர் ஆகியோர் செயல்படுகின்றனர்.
இதுகுறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.