ADDED : ஜன 06, 2024 12:10 AM
நுங்கம்பாக்கம், பணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வருமான வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, 'குருப்- பி' அதிகாரியாக பணியாற்றியவர் கார்த்திகேயன், 53. மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு வந்தார்.
அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கார்த்திகேயனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கார்த்திகேயன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.