/உள்ளூர் செய்திகள்/சென்னை/சேலையூர், குரோம்பேட்டை அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்புசேலையூர், குரோம்பேட்டை அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பு
சேலையூர், குரோம்பேட்டை அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பு
சேலையூர், குரோம்பேட்டை அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பு
சேலையூர், குரோம்பேட்டை அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பு
ADDED : ஜன 05, 2024 12:55 AM
தாம்பரம்,
சேலையூர் மற்றும் குரோம்பேட்டையில், 4.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையங்களை, காணொளி காட்சி மூலம், முதல்வர் ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார்.
தாம்பரம் மாநகராட்சியில், சேலையூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம், குரோம்பேட்டை பரலி சு.நெல்லையப்பர் பள்ளி ஆகிய இடங்களில், 4.5 கோடி ரூபாய் செலவில், அறிவுசார் மையங்கள் கட்டும் பணி நடந்து வந்தது.
இந்த மையங்களில், ஆன்லைன் ஸ்மார்ட் கிளாஸ், காற்றோட்டமான சூழலில் அமர்ந்து படிக்கும் அறை, இலவச இணையதளம், இன்றைய தேதிக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்ட கணிணிகள், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைக்கக்கூடிய அறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் பயன்பாட்டிற்கு வந்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீட் மற்றும் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் பயனடைவர். பணிகள் முடிந்த இந்த அறிவுசார் மையங்களை, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம், இன்று காலை திறந்து வைக்கிறார்.