/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு வேலை தருவதாக ரூ.45 லட்சம் மோசடி கணவன் கைது; மனைவிக்கு வலை அரசு வேலை தருவதாக ரூ.45 லட்சம் மோசடி கணவன் கைது; மனைவிக்கு வலை
அரசு வேலை தருவதாக ரூ.45 லட்சம் மோசடி கணவன் கைது; மனைவிக்கு வலை
அரசு வேலை தருவதாக ரூ.45 லட்சம் மோசடி கணவன் கைது; மனைவிக்கு வலை
அரசு வேலை தருவதாக ரூ.45 லட்சம் மோசடி கணவன் கைது; மனைவிக்கு வலை
ADDED : செப் 19, 2025 12:56 AM
எம்.ஜி.ஆர்.,நகர், அரசு வேலை வாங்கி தருவதாக, 45 லட் சம் ரூபாயை தம்பதி மோசடி செய்த வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர்; மனைவியை தேடி வருகின்றனர்.
கே.கே., நகர் 45 வது தெருவை சேர்ந்தவர் மதியழகன், 38; தனியார் நிறுவன மருந்தாளுனர். இவருக்கு தொழில் ரீதியாக மருத்துவர் வான்மதி, அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் ஆகிய இருவரும், 2016ம் ஆண்டு அறிமுகமாயினர்.
இவர்கள், 'மருத்துவ துறை மற்றும் மின்சார துறையில் உயர் பதவியில் உள்ளவர்களை தெரியும். ஏழு லட்ச ரூபாய் கொடுத்தால் மருத்துவ துறையிலும், மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால், மின்துறையிலும் வேலை வாங்கி தருகிறேன்' எனக்கூறியுள்ளனர்.
இதை நம்பிய மதியழகன், தனக்கு தெரிந்த 15 பேருக்கு அரசு வேலை வாங்கித்தருமாறு, 45 லட்சத்து, 41,000 ரூபாயை, வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட்டிடம் கொடுத்துள்ளனர். ஆனால், வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்ப அளிக்காமலும் அவர்கள் ஏமாற்றி வந்தனர்.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்தார்.
விசாரணைக்கு பின், ராமாபுரத்தை சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட், 38 என்பரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி வான்மதியை தேடி வருகின்றனர்.