/உள்ளூர் செய்திகள்/சென்னை/பஸ் நிலையத்தில் தொடர் 'பிக் பாக்கெட்' 'கில்லாடி' பெண் பிடிபட்டது எப்படி?பஸ் நிலையத்தில் தொடர் 'பிக் பாக்கெட்' 'கில்லாடி' பெண் பிடிபட்டது எப்படி?
பஸ் நிலையத்தில் தொடர் 'பிக் பாக்கெட்' 'கில்லாடி' பெண் பிடிபட்டது எப்படி?
பஸ் நிலையத்தில் தொடர் 'பிக் பாக்கெட்' 'கில்லாடி' பெண் பிடிபட்டது எப்படி?
பஸ் நிலையத்தில் தொடர் 'பிக் பாக்கெட்' 'கில்லாடி' பெண் பிடிபட்டது எப்படி?
ADDED : பிப் 11, 2024 12:28 AM

வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்தவர் சரண்யா, 27. இவர், கடந்த மாதம் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் வந்தபோது தன் பையை தவற விட்டார்.
அதேபோல், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரேமா, 22, என்பவரும் வள்ளலார் நகரில் பர்சை தவற விட்டார். இரு சம்பவங்கள் குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சரண்யாவின் ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி 49,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக, அவரது மொபைல் போனுக்கு நேற்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை, சிமெண்ட்ரி சாலை சந்திப்பு அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.,மில் இருந்து, பெண் ஒருவர் முகத்தை மூடியபடி வருவதை பார்த்து, ரோந்து போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
இதில், மதுரையைச் சேர்ந்த திவ்யபாரதி, 35, என்பதும், கடந்த மூன்று மாதங்களாக தங்கசாலை பேருந்து நிலையத்தில் முதியோர், பெண்களின் கவனத்தை திசை திருப்பி, மணிபர்ஸ், நகை, மொபைல் போன் உள்ளிட்டவற்றை திருடி வந்தது தெரிய வந்தது.
மேலும், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சசிகலா, 65, என்பவரின் ஏ.டி.எம்., கார்டை திருடி, 50,000 ரூபாய் எடுத்து ஏ.டி.எம்.,மில் இருந்து வெளியே வரும்போது, போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது.
முதியோர் ஏ.டி.எம்., கார்டின் பின்புறம் 'பின் எண்ணை' எழுதி வைத்திருப்பது, திவ்யபாரதிக்கு பணம் 'ஆட்டை' போடுவதற்கு உதவியாக இருந்துள்ளது.
இவர், மொபைல் போன்கள், வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.