Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாக்பூர் பெண் பலாத்காரம் குதிரை ஓட்டி கைது

நாக்பூர் பெண் பலாத்காரம் குதிரை ஓட்டி கைது

நாக்பூர் பெண் பலாத்காரம் குதிரை ஓட்டி கைது

நாக்பூர் பெண் பலாத்காரம் குதிரை ஓட்டி கைது

ADDED : பிப் 23, 2024 11:56 PM


Google News
திருவல்லிக்கேணி,

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்பு, 24. இவர் சென்னை, சேப்பாக்கம் பகுதியில் தங்கி, மெரினாவில் குதிரை சவாரி ஓட்டும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த இரு இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துள்ளனர். இவர்கள் பிழைப்பிற்கு வழியின்றி, மெரினாவில் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பப்பு இவர்களை ஆதரித்து, உணவு வாங்கிக் கொடுத்து, நல்லவர் போல காண்பித்துள்ளார். அதில் ஒரு பெண்ணை குறிவைத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம், மெரினா கடற்கரை பகுதியில், மது கொடுத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த வழியாக ரோந்து சென்ற திருவல்லிக்கேணி போலீசார், போதையில் மயங்கியிருந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அந்த பெண் அளித்த தகவலின்படி, பப்புவை கைது செய்தனர். அந்த பெண்ணை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ஒரு பெண்ணை, அவரின் சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us