/உள்ளூர் செய்திகள்/சென்னை/தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவம் திருக்கல்யாணத்திற்கு விடுமுறை கோரிக்கைதியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவம் திருக்கல்யாணத்திற்கு விடுமுறை கோரிக்கை
தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவம் திருக்கல்யாணத்திற்கு விடுமுறை கோரிக்கை
தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவம் திருக்கல்யாணத்திற்கு விடுமுறை கோரிக்கை
தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவம் திருக்கல்யாணத்திற்கு விடுமுறை கோரிக்கை
ADDED : பிப் 12, 2024 02:05 AM
திருவொற்றியூர்:தியாகராஜ சுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வான, தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண நிகழ்விற்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு, 14ம் தேதி விநாயகர் உற்சவம்; 15ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது.
விழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, குதிரை, யானை, சிம்மம், அதிகார நந்தி, பூதம், அஸ்தமான கிரி, இந்திர விமானம், நாகம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம், 21ம் தேதி புதன்கிழமையும், கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 23ம் தேதி, வெள்ளிக்கிழமையும் நடக்கிறது.
இவ்விரு நிகழ்விலும் பங்கேற்க, திருவொற்றியூர் மட்டுமின்றி சென்னை முழுதுமிருந்து, பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 24ம் தேதி இரவு கொடியிறக்கம்; 25ம் தேதி பின் இரவில், தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவத்துடன், மாசி பிரம்மோற்சவம் நிறைவுறும் என்பது குறிப்பிடத்தக்கது.