ADDED : ஜன 08, 2024 01:30 AM
திருவான்மியூர், பாம்பன் குமரகுரு சுவாமி கோவில் மயூர வாகன சேவா விழாவின், 100வது ஆண்டு விழா, வரும் 10 முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், 1967ல் வெளியிட்ட 'பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்' என்ற நுால், மறு பதிப்பு செய்து வெளியிடப்படும்.
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, 108 மாணவ - மாணவியரின், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்ட, சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணம் செய்தல் நடைபெறும். ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சேகர்பாபு,
அறநிலையத் துறை அமைச்சர்.