/உள்ளூர் செய்திகள்/சென்னை/சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சிசுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி
சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி
சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி
சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி
ADDED : ஜன 05, 2024 12:36 AM
செங்கல்பட்டு, 'சுகாதாரமும் ஊட்டச்சத்தும்' என்ற தலைப்பில், 2030க்குள் நம் நாடு அடைய வேண்டிய இலக்கு குறித்து, மூத்த குழந்தை நல நிபுணர் சவுமியா சுவாமிநாதன் பேசினார்.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பாக, இரண்டாவது தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி அரங்கில் நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மனோகரன், அறக்கட்டளை தலைவர் டாக்டர் சே.சுரேஷ், செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் பிச்சுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானியும், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவருமான மூத்த குழந்தை நல நிபுணர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், 'சுகாதாரமும் ஊட்டச்சத்தும்' என்ற தலைப்பில் 2030ம் ஆண்டுக்குள் நம் நாடு அடைய வேண்டிய இலக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் 1965 - 2016 வரை கல்லுாரியில் பயின்ற மாணவர்களின் தகவல் தொடர்பு விவரங்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது.