/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வரதட்சணை கேட்டு கொடுமை மின் வாரிய பொறியாளர் கைது வரதட்சணை கேட்டு கொடுமை மின் வாரிய பொறியாளர் கைது
வரதட்சணை கேட்டு கொடுமை மின் வாரிய பொறியாளர் கைது
வரதட்சணை கேட்டு கொடுமை மின் வாரிய பொறியாளர் கைது
வரதட்சணை கேட்டு கொடுமை மின் வாரிய பொறியாளர் கைது
ADDED : செப் 20, 2025 04:07 AM

அண்ணா நகர், சூளைமேடில் வரதட்சணையாக 200 சவரன் நகை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய, மின்வாரிய பொறியாளரான கணவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, நொளம்பூரைச் சேர்ந்தவர் ஹாரிஸ், 31; மின் வாரியத்தில் இளநிலை பொறியாளர். இவருக்கும், சூளைமேடைச் சேர்ந்த டிம்பிள் சங்கீதா, 26, என்பவருக்கும், பிப்., 2ல் திருமணம் நடந்தது. அப்போது பெற்றோர், சங்கீதாவிற்கு 100 சவரன் நகை கொடுத்துள்ளனர்.
தம்பதி, சூளைமேடில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், மேலும் 200 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், சொத்து பத்திரம் உள்ளிட்டவற்றை கேட்டு, மனைவி சங்கீதாவிடம், அவ்வப்போது ஹாரிஸ் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பிரச்னையில், சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிய ஹாரிஸ், சூளைமேடு வீட்டை காலி செய்து, நொளம்பூரில் தாயுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் சங்கீதா, கணவருடைய வீட்டிற்கு சென்றபோது, ஹாரிஸின் குடும்பத்தினர் அவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து, வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்துவதாக, அண்ணா நகர் மகளிர் போலீசில், சங்கீதா புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் சென்னை மாவட்ட வரதட்சணை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஹாரிஸை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.