ADDED : ஜூன் 21, 2024 12:13 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
நரசிம்மர் பிரம்மோற்சவம் முன்னிட்டு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் - -காலை 5:30 மணி. யோக நரசிம்மர் திருக்கோலம் - -மாலை 4:00 மணி. அனுமந்த வாகன புறப்பாடு - -இரவு 8:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
வெள்ளீஸ்வரர் கோவில்
வெள்ளீஸ்வரர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பவழக்கால் வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதி உலா - -காலை 7:00 மணி. கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு.
கபாலீஸ்வரர் கோவில்
பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமிக்கு முக்கனி சாத்துதல் - -மாலை 5:30 மணி. சந்திரசேகர சுவாமி திருவிழா-- இரவு 7:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அய்யப்பன் கோவில்
உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம்- - மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
பவுர்ணமி கிரிவலம்
கமலக்கண்ணன் தலைமையில் அவுடத சித்தர் மலை கிரிவலம் புறப்பாடு. மாலை 5:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பவுர்ணமி வழிபாடு
அபிஷேகம் -- காலை 7.00 மணி. அன்னதானம் - முற்பகல் 11.00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பிரம்மோற்சவம் நேரம்: காலை நடராஜர் உற்சவம், மாலை திருக்கல்யாணம் பஞ்சமூர்த்தி திருவீதி உலா. இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம், சென்னை -23.
சென்னையில் பவுர்ணமி கிரிவலம்
புறப்படும் நேரம்: மாலை 5:00 மணி. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயம், அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம். தொடர்புக்கு: 9382664059
பொது
பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி. -காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
சர்வதேச யோகா தினம்
பதஞ்சலி மஹரிஷி யோகாலயத்தின் 500 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஓம் உச்சரித்தல், யோகா, பிராணாயாமம். காலை 6:00 மணி முதல். இடம்: லிட்டில் பிளேர் மேல்நிலைப் பள்ளி வளாகம், குன்றத்துார்.
இலவச மருத்துவ முகாம்: கண் மருத்துவம். காலை 8:00 மணி. இடம்: சாக்கு சித்தர் கோவில், எம்.கே.என்.ரோடு, ஆலந்துார்.
அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஆண்டு விழா
மாலை 6:00 மணிக்கு சொற்பொழிவு, இரவு 7:00 மணிக்கு வாத்திய சங்கமம். இடம்: கந்தசுவாமி திருக்கோயில், சண்முகஞானபுரம், குயப்பேட்டை, சென்னை.
லயன்ஸ் இன்டர்நேஷனல் நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. மாலை 4:00 மணி. இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா மெயின் ரோடு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78.
விஷ்வா விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தானம் சார்பில் யோகா தினம்
காலை 6:00 முதல் 6:45 மணி வரை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 6:45 முதல் 7:15 மணி வரை குழு யோகா பயிற்சி, 7:15 முதல் 8:00 மணி வரை யோகா மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் குறித்து பேச்சு. 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை யோகா, விஷ்ணு சகஸ்ரநாமம் குறித்த மாநாடு, 2:00 முதல் மாலை 5:00 வரை ஸ்லோகங்களுக்கு விளக்கம். இடம்: ஸ்ரீகிருஷ்ணசுவாமி திருமண மண்டபம், தி.நகர், சென்னை - 600 017.