/உள்ளூர் செய்திகள்/சென்னை/நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்புநகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு
நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு
நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு
நகர்ப்புற வனம் அமைக்க ரூ.5 கோடி ஒப்படைப்பு
ADDED : பிப் 23, 2024 11:47 PM
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நகர்ப்புற வனம் அமைக்கும் பணிக்காக, சி.எம்.டி.ஏ., சார்பில், 5 கோடி ரூபாய் நிதி, வனத்துறையிடம் நேற்று அளிக்கப்பட்டது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், பல்வேறு திட்டங்கள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன.
இதன்படி, பழைய மாமல்லபுரம் சாலையிலுள்ள சிறுசேரியில், நகர்ப்புற வனம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக, 5 கோடி ரூபாய் சி.எம்.டி.ஏ., நிதி, வனத்துறையின் தமிழக பசுமை, காலநிலை நிறுவனத்திடம், நேற்று ஒப்படைக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு, இதற்கான காசோலையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் ஒப்படைத்தார்.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.