/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஹேக்கத்தான் இணையதளம் பல்கலையில் துவக்கம் ஹேக்கத்தான் இணையதளம் பல்கலையில் துவக்கம்
ஹேக்கத்தான் இணையதளம் பல்கலையில் துவக்கம்
ஹேக்கத்தான் இணையதளம் பல்கலையில் துவக்கம்
ஹேக்கத்தான் இணையதளம் பல்கலையில் துவக்கம்
ADDED : ஜூன் 03, 2025 12:18 AM
சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் தமிழக, 'ஸ்டார்ட் அப்' இயக்கத்துடன் இணைந்து துவங்கப்பட்ட 'ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான் - 2025' இணையதளத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மாநிலம் முழுதும், 800க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, மருத்துவ துறையில் உள்ள சிக்கல்களை தொழில்நுட்ப அடிப்படையில் தீர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இவை, சுகாதார பிரச்னைகளை தீர்க்க, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
மேலும், மருத்துவ துறையில் பொருளாதார இலக்கை அடைவதற்கும், மருத்துவ துறையில் புதுமையான தீர்வுகளை உருவாக்க முடியும்.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துள்ளது. இந்த விஞ்ஞானத்தை, மருத்துவ துறைக்கு செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.