/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிண்டி எரிவாயு மயானங்கள் ரூ.5.51 கோடியில் மேம்பாடு கிண்டி எரிவாயு மயானங்கள் ரூ.5.51 கோடியில் மேம்பாடு
கிண்டி எரிவாயு மயானங்கள் ரூ.5.51 கோடியில் மேம்பாடு
கிண்டி எரிவாயு மயானங்கள் ரூ.5.51 கோடியில் மேம்பாடு
கிண்டி எரிவாயு மயானங்கள் ரூ.5.51 கோடியில் மேம்பாடு
ADDED : ஜூன் 03, 2025 11:56 PM
கிண்டி, அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி, அருளாயம்மன்பேட்டை, சிட்கோ வளாகம், மாஞ்சோலை பகுதியில் எரிவாயு மயானங்கள் உள்ளன.
இந்த மயானங்கள் அடிக்கடி பழுதடைந்து, தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த மயானங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், மாஞ்சோலை பகுதியில் புதிய எரிவாயு கட்டமைப்பு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அப்பணிகளுக்காக, 5.51 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.