/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவு பிரச்னை தீர்க்க அரசு துறைகள் இணையணும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு கழிவு பிரச்னை தீர்க்க அரசு துறைகள் இணையணும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கழிவு பிரச்னை தீர்க்க அரசு துறைகள் இணையணும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கழிவு பிரச்னை தீர்க்க அரசு துறைகள் இணையணும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கழிவு பிரச்னை தீர்க்க அரசு துறைகள் இணையணும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 25, 2025 12:56 AM
சென்னை, 'கழிவு மேலாண்மை பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் அபாயகரமான கழிவுகளை பொது வெளியில், நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சென்னை மாநகராட்சியும் தாக்கல் செய்த அறிக்கைகளில், கழிவு மேலாண்மை பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக சொல்லப்படவில்லை.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கும்போது, கழிவு மேலாண்மைக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நகரமைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம் ஆகியவையும் கழிவு மேலாண்மை பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், கழிவுகளை அகற்றும் பிரச்னையை தீர்ப்பது கடினமாக இருக்கும்.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு துறைகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும். கழிவுநீர், திடக்கழிவு பி ரச்னை தொடர்பாக, சென்னை மாநகராட்சியும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் டிச., 12ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.