Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

ADDED : செப் 09, 2025 01:19 AM


Google News
மணலி மண்டலம், 17வது வார்டு, கொசப்பூர் - அரியலுார் பிரதான சாலையில், அரசுக்கு சொந்தமான, சர்வே எண் 247ல் உள்ள, 10,000 சதுர அடி நிலத்தில், லோகநாதன் என்பவர் லாரி ஷெட் அமைத்து, ஆக்கிரமித்திருந்தார்.

மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை அங்கு சென்று, பொக்லைன் இயந்திரம் உதவியுடன், ஆக்கிரமிப்பில் இருந்த லாரி ஷெட் மற்றும் லாரிகளை அப்புறப்படுத்தி, இடத்தை கையகப்படுத்தினர். இதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, அதிகாரிகள் கூறினர்.

சில வரி

--

2 மணி நேரம்

மின் வெட்டு

மணலி - சாலைமா நகர், சன்னிதி தெருவில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஜன., மாதம் முதல், உயர்மின் அழுத்தம் மற்றும் மின் சேவை தடங்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், 'ஏசி, ப்ரிஜ், டிவி' உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. நேற்று முன்தினம் இரவும், மின் வெட்டு ஏற்பட்டு, இரண்டு மணி நேரம், மக்கள் புழுக்கத்தால் தவிக்க நேர்ந்தது. ஆனால், அதிகாரிகள் யாரும் போனை எடுக்கவில்லை.

--

கஞ்சா கடத்திய

ரயில் பயணி கைது

மேற்குவங்கம் மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 5வது நடைமேடைக்கு ஷாலிமர் விரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு வந்தது.

இதில் வந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பயணி சந்தோஷ், 43, உடைமைகளை சோதித்தபோது 2.10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவரை, ரயில்வே போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

--

'லிப்ட்' ஆப்பரேட்டர்

மீது தாக்குதல்

எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 35; நகர்புற மேம்பாட்டு வாரியத்தில் மின்துாக்கி பராமரிப்பு பொறுப்பாளர்.

வியாசர்பாடி, முல்லை நகர், டி.டி., பிளாக்கில் உள்ள மின்துாக்கி பழுதை சீரமைக்கும் பணியில் கண்ணன் ஈடுபட்டார். அங்கு வசிக்கும் போதை ஆசாமி பாலாஜி, 19, ஆபாசமாக பேசி, மதுபாட்டிலால் அடித்ததில், கண்ணனின் பின் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பாலாஜியை நேற்று, போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us