விதிமீறிய லாரிக்கு ரூ.50,000 அபராதம்
விதிமீறிய லாரிக்கு ரூ.50,000 அபராதம்
விதிமீறிய லாரிக்கு ரூ.50,000 அபராதம்
ADDED : மார் 23, 2025 12:44 AM
சோழிங்கநல்லுார்,
சோழிங்கநல்லுார் மண்டலம் வழியாக, பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இதன் கரையோரம், சதுப்பு நிலத்தில் கட்டடம், இறைச்சி கழிவுகள், சிமென்ட் கான்கிரீட் கலவை கொட்டுவது அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிரதான சாலை, சதுப்பு நிலத்தில் ஓ.இ.எம்., நிறுவன லாரி, சிமென்ட் கலவை கழிவு கொட்டியது. மாநகராட்சி ரோந்து படை அதிகாரிகள், இந்த லாரியை பறிமுதல் செய்து, 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.