/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது - சென்னை - திருச்சி விமானம் சேவை நாளை துவக்கம் பொது - சென்னை - திருச்சி விமானம் சேவை நாளை துவக்கம்
பொது - சென்னை - திருச்சி விமானம் சேவை நாளை துவக்கம்
பொது - சென்னை - திருச்சி விமானம் சேவை நாளை துவக்கம்
பொது - சென்னை - திருச்சி விமானம் சேவை நாளை துவக்கம்
ADDED : மார் 21, 2025 12:13 AM
சென்னை, மார்ச் 21-
சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக, பயணியர் அதிகம் வந்து செல்லும் விமான நிலையங்களின் எண்ணிக்கையில் திருச்சி உள்ளது.
திருச்சியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களுக்கும், சார்ஜா, துபாய் போன்ற நாடுகளுக்கும் விமான சேவை உள்ளது.
ஆனால் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்வதற்கு, இண்டிகோ நிறுவனம் மட்டுமே தினசரி சேவைகளை வழங்கி வந்தது. இதனால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்காக இருந்தது.
எனவே கூடுதல் சேவைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணியர் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னை - திருச்சி இடையேயான தினசரி விமான சேவையை நாளை துவங்குகிறது.
சென்னையிலிருந்து மாலை 6:45 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7: 45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
திருச்சியில் இருந்து இரவு 8:15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9:15 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமானத்தில், பிசினஸ் கிளாஸ் வகுப்புகளும் உள்ளது.