/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோயம்பேடு சந்தை சாலையில் குப்பையால் சுகாதார சீர்கேடுகோயம்பேடு சந்தை சாலையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
கோயம்பேடு சந்தை சாலையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
கோயம்பேடு சந்தை சாலையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
கோயம்பேடு சந்தை சாலையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 03, 2024 12:28 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தை சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையில் கழிவுநீர் கலந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.கோயம்பேடு சந்தை மற்றும் நெற்குன்றம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக, மார்க்கெட் 'ஏ' சாலை உள்ளது.இச்சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.கோயம்பேடு சந்தை மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி, சாலையோரம் காய்கறி மற்றும் பிளாஸ்டிக் குப்பை குவிக்கப்பட்டு உள்ளது.குப்பையில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், குப்பையும் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அதில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், அச்சாலையைக் கடந்து செல்லும் அனைவரும் சிரமப்படுகின்றனர்.
இதனால், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கடந்த ஆண்டு, நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, குப்பை அகற்றப்பட்டது. தற்போது, மீண்டும் அதே பகுதியில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அப்பகுதியை சுத்தம் செய்து, மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது.