/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள் நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்
நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்
நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்
நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்
ADDED : மே 24, 2025 11:48 PM
சென்னை :உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்தியானந்த யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி திருவீதி அம்மன் கோவில் தெருவில், மே 30ம் தேதியும், நங்கநல்லுார், லட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹாலில், மே 31ம் தேதியும் இலவச யோக வகுப்புகள் துவங்கி, நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நடக்கிறது.
பீஹார் யோகா பள்ளியால் ஆசனம், பிரணாயாமம், ஐம்புலன் அடக்கம் எனும் பிரத்தியாகாரம், தாரணா மந்திரம், உணவு பழக்கவழக்கம், உடல் உள்ளுறுப்புகள் பாதுகாத்தல் எனும் ஷட்கிரியைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள், வார நாட்களில், தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகின்றன. விபரங்களுக்கு, 94450 51015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.