ADDED : ஜன 31, 2024 12:21 AM
வேளச்சேரி, வேளச்சேரி, சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள் பிப்., 4ம் தேதி துவங்குகிறது.
உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்யானந்த யோகா மையத்தின், சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி, திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மன் கோவிலில், சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், இலவச யோக வகுப்புகள் நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன.
பீகார் யோகா பள்ளியால் ஆசனம், பிரணாயாமம், ஐம்புலன் அடக்கம் எனும் பிரத்தியாகாரம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
வகுப்புகள் வார நாட்களில், தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடக்க உள்ளன. மேலும் விபரங்களுக்கு 78717 15152, 94450 51015 என்ற எண்களில் தொடர்பு கொள்லாம்.