ADDED : ஜன 28, 2024 12:23 AM
நங்கநல்லுார், உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்யானந்த யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நங்கநல்லுார், லட்சுமி நகர் பிரதான சாலை, சுதர்ஷன் டேரஸ் ஹாலில் வகுப்புகள், பிப்., 3ம் தேதி துவங்குகின்றன.
பீஹார் யோகா பள்ளியால் ஆசனா, பிராணயாமம், ஐம்புலன் அடக்கமான பிரத்யாகாரம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
நான்கு வாரங்கள் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்புகள், தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகின்றன.
முன் பதிவிற்கு 98412 27709, 94450 51015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.