/உள்ளூர் செய்திகள்/சென்னை/இலவச மருத்துவ முகாம் 500 பேருக்கு பரிசோதனைஇலவச மருத்துவ முகாம் 500 பேருக்கு பரிசோதனை
இலவச மருத்துவ முகாம் 500 பேருக்கு பரிசோதனை
இலவச மருத்துவ முகாம் 500 பேருக்கு பரிசோதனை
இலவச மருத்துவ முகாம் 500 பேருக்கு பரிசோதனை
ADDED : ஜன 29, 2024 01:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில், நியூ சன்பிளவர் அறக்கட்டளை செயலர் சிவராஜ் ஒருங்கிணைப்பில், ராஜா அண்ணாமலைபுரம் பில்ரோத் மருத்துவமனை, ராகா பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சைட் கேர் பவுண்டேஷன் இணைந்து, மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தின.
எத்திராஜன்- - காளீஸ்வரி தம்பதியின் நினைவாக, அவர்களது மகன் மாணிக்கம் 4 லட்சம் ரூபாய் சொந்த செலவில், இம்முகாமிற்கு ஏற்பாடு செய்தார்.
இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை முடிந்து, உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.
மருந்தாளுனர் கார்த்திக்கேயன் மருந்து மாத்திரைகள் வழங்கினார்.
முகாமில், கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, சாத்தாங்குப்பம் விரிவாக்கம் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் எல்லப்பன், தையூர் ஊராட்சி தலைவர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.