அரசு வேலை ஆசைகாட்டி பெண்ணிடம் மோசடி
அரசு வேலை ஆசைகாட்டி பெண்ணிடம் மோசடி
அரசு வேலை ஆசைகாட்டி பெண்ணிடம் மோசடி
ADDED : ஜன 11, 2024 01:06 AM
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் கவிதா, 45. அவரிடம், அதே பகுதியை சேர்ந்த கோபி, சசிகலா தம்பதி நட்புடன் பழகி வந்துள்ளனர். தங்கள் மகன் கார்த்திக், 24, துறைமுக உயரதிகாரிகளுக்கு நன்கு அறிமுகமானவர் என்றும், அங்கு வேலை வாங்கி தருவதாகவும் கவிதாவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய கவிதா, 2021ல் 1.50 லட்சம் ரூபாய் ரூபாய் கொடுத்துள்ளார். பின் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் கவிதாவை ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் படி, வியாசர்பாடி நேற்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.