/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோடம்பாக்கம் சலுான் கடையில் கோகைன் விற்ற ஐந்து பேர் கைது கோடம்பாக்கம் சலுான் கடையில் கோகைன் விற்ற ஐந்து பேர் கைது
கோடம்பாக்கம் சலுான் கடையில் கோகைன் விற்ற ஐந்து பேர் கைது
கோடம்பாக்கம் சலுான் கடையில் கோகைன் விற்ற ஐந்து பேர் கைது
கோடம்பாக்கம் சலுான் கடையில் கோகைன் விற்ற ஐந்து பேர் கைது
ADDED : ஜூன் 03, 2025 12:35 AM
அசோக் நகர், அசோக் நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள முடி திருத்தும் கடையில், ஊழியர் ஒருவர் கோகைன் மற்றும் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பதாக, போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள சலுான் கடையில் பணிபுரியும் ராயப்பேட்டையை சேர்ந்த கஜேந்திரன், 32, என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் இருந்த, 18 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
கஜேந்திரன் அளித்த தகவலின்படி, தனியார் வங்கி ஊழியரான, கே.கே., நகரை சேர்ந்த விக்னேஷ், 25, கண்ணகி நகரை சேர்ந்த ஐ.டி., ஊழியர் இர்பான், 26, கல்லுாரி மாணவர் செல்வராஜ், 26, பயோ பிளாஸ்டிக் கடையில் பணியாற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த பைசல், 30, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 28 கிராம் கோகைன் மற்றும் 6 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த, பெங்களூரை சேர்ந்த தர்ஷன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
* ஐஸ்ஹவுஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 7ம் தேதி, மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ், 28, உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனுப், 25, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.