Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ படகுகளுக்கான ஆவணங்கள் வழங்காமல் அலைக்கழிப்பு அதிகாரிகள் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

படகுகளுக்கான ஆவணங்கள் வழங்காமல் அலைக்கழிப்பு அதிகாரிகள் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

படகுகளுக்கான ஆவணங்கள் வழங்காமல் அலைக்கழிப்பு அதிகாரிகள் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

படகுகளுக்கான ஆவணங்கள் வழங்காமல் அலைக்கழிப்பு அதிகாரிகள் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

ADDED : மார் 19, 2025 12:19 AM


Google News
காசிமேடுபுதிய படகுகளுக்கு பதிவு எண் வழங்குவது, வங்கி கடன் பெற தேவைப்படும் ஆவணம் வழங்குவது உள்ளிட்டவற்றில் மீன்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி, பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று கூறியதாவது:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தினாலும், மீன்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரு மீனவர் பெயரில் ஒரு படகு மட்டும் தான் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், மீதமுள்ள படகுகளை தன் குடும்பத்தாரின் பெயர்களுக்கு மாற்றிய போதும், படகுகளுக்கான பதிவு எண் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

மானிய அட்டைகளில், படகுகளின் உரிமையாளர்களின் பெயர் மாற்றுவதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்வதால், மத்திய - மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய வங்கி கடன்களை பெற முடியாமல், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் மானியத்தில், 15 லட்ச ரூபாய் வரை மீனவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும் நிலையில், அதற்கான ஆவணங்களை பெற மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்திக்க செல்லும்போது அவமதிக்கப்படுவதாலும், ஆவணங்கள் வழங்க மீன்வளத்துறை அதிகாரிகள் தாமதம் செய்வதாலும் வங்கி கடன் கிடைக்காமல், மீனவர்கள் தங்களது வாழ்வாதரங்களை இழந்து வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவல அதிகாரிகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us