/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடையில் நள்ளிரவில் தீ விபத்து காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடையில் நள்ளிரவில் தீ விபத்து
காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடையில் நள்ளிரவில் தீ விபத்து
காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடையில் நள்ளிரவில் தீ விபத்து
காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடையில் நள்ளிரவில் தீ விபத்து
ADDED : ஜூன் 17, 2025 01:02 AM
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் அப்பர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 40. அதே பகுதியில், காஸ் ஸ்டவ் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில், இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியானது.
கட்டட உரிமையாளர் கொடுத்த தகவலையடுத்து, திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் கடை முழுதும் தீக்கிரையானது.
இதில், காஸ் ஸ்டவ் ரிப்பேருக்காக வாங்கி வைத்திருந்த, புதிய உபகரணங்கள் உட்பட, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.
தீ விபத்து குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
***