61 உயர்கல்வி மாணவிகளுக்கு நிதி உதவி
61 உயர்கல்வி மாணவிகளுக்கு நிதி உதவி
61 உயர்கல்வி மாணவிகளுக்கு நிதி உதவி
ADDED : மார் 24, 2025 11:38 PM
கண்ணகி நகர் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும், 61 உயர்க்கல்வி படிக்கும் மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்க, 'நியா' தொண்டு நிறுவனம் முன் வந்தது.
சமுதாய வளர்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பில், 'டர்னிங் பாயின்ட்' அமைப்பு மாணவியரை தேர்வு செய்தது. இவர்களுக்கு, படிப்பு கட்டணத்திற்கு ஏற்ப, 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை, 61 பேருக்கு, 16 லட்சம் ரூபாய், நேற்று வழங்கப்பட்டது.