/உள்ளூர் செய்திகள்/சென்னை/மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலிமறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி
மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி
மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி
மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி
ADDED : பிப் 24, 2024 11:56 PM

மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் மதன், 38. நேற்று காலை மதன் அவரது மகள் தன்யா, 5, மற்றும் வீட்டின் அருகில் உள்ள மூன்று குழந்தைகளுடன், அருகில் உள்ள பனங்கொட்டூர் ஏரியில் குளிக்கச் சென்றார்.
ஏரியில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது சிறுமி தன்யா திடீரென தண்ணீரில் மூழ்கினார். மகளை காப்பாற்ற முயன்ற மதனும் தண்ணீரில் மூழ்கினார்.
அருகில் இருந்தவர்கள் ஏரியில் இருந்து சிறுமி தன்யாவின் உடலை மீட்டனர். மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் நீண்ட நேரம் தேடி, மதனின் உடலை மீட்டனர்.
இருவரின் உடலையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.