/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை விளக்கம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை விளக்கம்
மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை விளக்கம்
மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை விளக்கம்
மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை விளக்கம்
ADDED : மார் 25, 2025 12:05 AM
சென்னை, மார்ச் 25-
சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உணவு 'ஆன்லைன்' ஆர்டர் செய்தது தொடர்பாக, பயிற்சி டாக்டர், மருத்துவமனை ஊழியரிடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, மருத்துவ கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்:
பயிற்சி மருத்துவ மாணவர், 20ம் தேதி இரவில், விடுதியில் இருந்து வெளியே வந்து, இணையவழியில் ஆர்டர் செய்திருந்த உணவு பார்சலை வாங்கி சென்றார்.
அப்போது மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றும் பாதுகாவலர், துாய்மை பணியாளர், சம்பந்தப்பட்ட மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வாக்குவாதம் வலுவடைந்து, ஒருகட்டத்தில் மாணவர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் நிகழ்ந்த உடனேயே, தொடர்புடைய இரு ஊழியர்களையும், அங்கிருந்து வெளியேற்ற, பணிக்கு அனுப்பிய தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மாணவர் குறைதீர் குழு அமைக்கப்பட்டு, விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இப்பிரச்னை குறித்த நடவடிக்கைகளையும், மாணவ பிரதிநிதிகளிடம் விளக்கியுள்ளோம்.
மேலும், வெளியிலிருந்து ஒப்பந்த அடிப்படையில், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனங்களிடம் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதுடன், கண்ணியத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ., நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.