/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எர்ணாவூர் மேம்பாலம் மரங்களால் பலவீனம் எர்ணாவூர் மேம்பாலம் மரங்களால் பலவீனம்
எர்ணாவூர் மேம்பாலம் மரங்களால் பலவீனம்
எர்ணாவூர் மேம்பாலம் மரங்களால் பலவீனம்
எர்ணாவூர் மேம்பாலம் மரங்களால் பலவீனம்
ADDED : ஜூன் 30, 2025 03:06 AM
எண்ணுார்:எர்ணாவூர் மேம்பாலத்தின் பக்கவாட்டில் வளரும் மரங்களால், மேம்பாலம் பலவீனமாகி வருகிறது.
எர்ணாவூர் மேம்பாலம், எண்ணுார், எர்ணாவூர், சத்தியமூர்த்தி நகர், மணலியை இணைக்கும் வகையில் உள்ளது. நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேம்பாலம் கட்டி பல ஆண்டுகளான நிலையில், பக்கவாட்டில் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. செழித்து வளரும் மரங்களால், பாலத்தின் ஸ்திரத்தன்மையிலும் சந்தேகம் எழுகிறது.
காரணம், மரத்தின் வேர்கள், மேம்பாலத்தின் கான்கிரிட் பூச்சுகளை பெயர்த்து, பலவீனமாக்கி வருகிறது.
எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனித்து, மேம்பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்திருக்கும், செடி, கொடி மற்றும் மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.