Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீவுத்திடலில் மீன் உணவு திருவிழா இன்றும், நாளையும் ருசிக்கலாம்

தீவுத்திடலில் மீன் உணவு திருவிழா இன்றும், நாளையும் ருசிக்கலாம்

தீவுத்திடலில் மீன் உணவு திருவிழா இன்றும், நாளையும் ருசிக்கலாம்

தீவுத்திடலில் மீன் உணவு திருவிழா இன்றும், நாளையும் ருசிக்கலாம்

ADDED : மே 31, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
சென்னை:மீன்வளத் துறை சார்பில், மூன்று நாள் மீன்வள திருவிழா, சென்னை தீவுத்திடலில் நேற்று துவங்கியது. இதை, தமிழக துணை முதல்வர் உதயநிதி, துவக்கி வைத்தார். இன்றும், நாளையும் நடக்கிறது.

அப்போது, மீன்வளத் துறை சார்பில் தயாரான, '100 வகையான இறால் உணவுகள்' செய்முறை நுாலை, உதயநிதி வெளியிட, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, செயலர் சுப்பையன் பெற்றுக் கொண்டனர்.

மீன்வளத்துறை கமிஷனர் கஜலட்சுமி நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கடல் உணவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான புரதம் மற்றும் நல்ல கொழுப்புச்சத்து இறால்களில் உள்ளது. அதனாலே, வெளிநாடுகளில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழக மக்கள், சிக்கன், மட்டன் உண்ணும் அளவிற்கு இறாலை உண்ணுவதில்லை. விலை அதிகமாக இருப்பதாக கூறி தவிர்த்துவிடுகின்றனர். இறால் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். இதை ஊக்குவிக்கும் வகையில் தான் இக்கண்காட்சி நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில், 50 கடல் உணவு அரங்குகள், 20 மீன்களுக்கான உணவு அரங்குகள், 15 வண்ணமீன் அரங்குகள் மற்றும் ஆவின் அரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சமையல் கலை மாணவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு சமையல் போட்டிகள், மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஆகியவையும் நடக்கின்றன.

விலை குறைவு

இங்குள்ள கடல்மீன் உணவுகள் மிகவும் ருசியாக உள்ளது. ஸ்டார் உணவகங்களில் இருக்கும் அளவுக்கு தரமாக உள்ளது. விலையும் குறைவாகவே உள்ளது. அதிக மக்கள் வருவதால், இடம் பற்றாக்குறை உள்ளது. 50 ரூபாய்க்கு கொடுவா மீன் வறுவல் மிக அருமையாக உள்ளது.

-எம்.ராஜு, 40,

சோழிங்கநல்லுார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us