Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ADDED : மே 17, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
கிண்டி கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, 2015ம் ஆண்டு, 2.10 கோடி ரூபாயில், 60 அடி அகலமாக மேம்படுத்தப்பட்டது. இதற்காக, ரேஸ்கோர்ஸ் தடுப்புச் சுவரை அகற்றி, 10 கிரவுண்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது.

ஆனாலும், வாகன நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நிகழ்வது தொடர்கிறது. அதனால், ரேஸ்கோர்ஸ் வசமிருந்த இடத்தை, மாநகராட்சி கையகப்படுத்தியது.

இந்நிலையில், சென்னை கலெக்டர் உத்தரவின்படி, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்திற்காக, அங்கு அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு, வருவாய்துறை சார்பில் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஏழு கடைகள், அரசு நிலத்தில் இருந்த 10 கடைகளை அகற்றும் பணி, நேற்று துவங்கியது.

ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்த வியாபாரிகள், தங்கள் பொருட்களை எடுத்து வைக்க கால அவகாசம் கேட்டனர். அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us